தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியதாகவும், சாலைகள், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக தைவான் மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த போது, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடியுள்ளார். மேலும் ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் குலுங்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 146 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.