வட கொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் கடந்த ஓராண்டாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயிர்கள் அழிந்து தானிய விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் வெளிநாடுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகளும் விவசாயத்தை பாதித்துள்ளன.
இந்நிலையில் வடகொரிய ஆளும் கட்சி கூட்டத்தில் பேசிய கிம் ஜோங் உன், நாட்டில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தானிய உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற தங்கள் நாட்டு விவசாயத் துறையினர் தவறி விட்டதாகவும் கிம் ஜோங் உன் விமர்சித்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.