`ஒருதடவ முடிவுபண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’- போலீஸ் வாகனத்துக்கு தீவைத்த நபர்

`ஒருதடவ முடிவுபண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’- போலீஸ் வாகனத்துக்கு தீவைத்த நபர்
`ஒருதடவ முடிவுபண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’- போலீஸ் வாகனத்துக்கு தீவைத்த நபர்
Published on

தன்னை ‘professional arsonist’ எனக்கூறிக்கொள்ளும் ஃப்ளோரிடா நபர், தான் குடித்துவிட்டால் என்னசெய்வார் என்பது தனக்கே தெரியாது எனக் கூறிக்கொண்டு மதுபோதையில் போலீஸ் வாகனத்துக்கே தீவைத்துள்ளார்.

ஃப்ளோரிடாவைச் சேர்ந்தவர் அந்தோணி தாமஸ் டர்டுனோ(48). இவர் கடந்த 7ஆம் தேதி நார்த்க்ளிஃப் பௌலிவார்டு பாரில் மாலை 4.30 மணியளவில் குடித்துவிட்டு வெளிவந்தபோது அங்கிருந்த போலீஸ் வாகனத்தை பார்த்தவுடன், அதற்கு தீவைத்துச் சென்றுள்ளார்.

தன்னை ‘professional arsonist’ (தீ மூட்டுவதை தொழிலாக கொண்டிருப்பவர்) எனக்கூறிக்கொள்ளும் அந்தோணி என்ற நபர், பாரிலிருந்து வெளியே வந்தபோது அங்கு நின்ற போலீஸ் ரோந்து வாகனத்தை பார்த்துள்ளார். உடனடியாக அந்த வாகனத்துக்கு தீவைக்கும் எண்ணம் அவருக்கு தோன்றியுள்ளது. அதனையடுத்து அங்கு கிடந்த குப்பைகளை சேகரித்து வாகனத்துக்கு அடியில் போட்டு தீக்கொளுத்திவிட்டு மீண்டும் பாருக்கே சென்றுவிட்டார்.

ஆனால் பாரின் உள்ளே சென்று அமர்ந்திருந்த அந்தோணிக்கு குற்றஉணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மனசாட்சி உறுத்தியதால், மீண்டும் சம்பவ இடத்திற்கு திரும்பிவந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தோணி, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் குடிக்கிறாரோ அப்போதெல்லாம் எங்கேனும் தீவைக்க வேண்டும் என்பதுபோன்ற முட்டாள் தனமாக எண்ணங்கள் அவருக்கு வருமாம்.

இதற்கு முன்பே, 2011 மற்றும் 2012 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தீவைத்த குற்றம் மற்றும் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளியின் வீடியோ கடந்த வாரத்திலிருந்தே ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com