புயலால் குடியிருப்புப் பகுதியில் புகுந்த ஆற்றுநீரில் மக்கள் உற்சாகத்துடன் விளையாடும் நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது.
அட்லாண்டிக் கடலில் உருவான ஃபிளாரென்ஸ் புயல் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை புரட்டிப்போட்டது. இந்தப் புயலால் 18 பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். அப்பகுதியையே சூறையாடிய இப்புயல் கரையை கடந்து சென்ற நிலையில், மழை காரணமாக அங்குள்ள நியூ பெர்ன் ஆற்று நீரின் அளவு உயர்ந்தது. ஆற்று நீர் வெள்ளமாக மாறி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பல குடியிருப்புப் பகுதிகளில் ஆற்றுநீர் தேங்கி காணப்படுகிறது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் ஊருக்குள் புகுந்த நியூ பெர்ன் ஆற்றுநீரில், மக்கள் தங்களின் செல்லப் பிராணிகளுடன் நீந்தி விளையாடி மகிழ்கின்றனர்.