திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை குறைத்துக் கூறிய இலங்கை அரசு?

திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை குறைத்துக் கூறிய இலங்கை அரசு?
திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை குறைத்துக் கூறிய இலங்கை அரசு?
Published on

இலங்கையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஆனால் 25 பேர் மட்டுமே உயிரிழந்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 91 பேர் பலியானதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் 25 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பகுதியான கலுத்தராவில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால், மண் அரிப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கானோர் சிக்கிப் புதையுண்டனர். சுமார் 7 ஆயிரத்து 800 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 400 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக இலங்கை உள்துறை அமைச்சர் வஜிரா அபயவர்தனா தெரிவித்தார். இந்த இயற்கைப் பேரிடரில் 91 பேர் உயிரிழந்ததாக AFP செய்தி நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது.

மேலும் 100 க்கும் மேற்ப்பட்டவர்களை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். காணாமல் போனவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என்று மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com