ஜப்பானின் தென்பகுதியில் உள்ள ஷுரி அரண்மனையில் ஏற்பட்ட தீயில் வரலாற்று ஓவியங்கள் மற்றும் அரியவகை பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்த தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிர்சேதம் இல்லை எனக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின்போதும் இந்த அரண்மனை தீவிபத்தில் சிக்கியது. அதன்பின் மறுசீரமைக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு வந்தது. ஆக்கினாவாவில் அமைந்திருக்கும் இந்த அரண்மனை 1933 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது.