19 ஆண்டுகளாக திருட்டு பொருட்களை ஆன்லைனில் விற்றுவந்த தில்லாலங்கடி பெண்..!

19 ஆண்டுகளாக திருட்டு பொருட்களை ஆன்லைனில் விற்றுவந்த தில்லாலங்கடி பெண்..!
19 ஆண்டுகளாக திருட்டு பொருட்களை ஆன்லைனில் விற்றுவந்த தில்லாலங்கடி பெண்..!
Published on
19 ஆண்டுகளாக திருட்டு பொருட்களை ஆன்லைனில் விற்றுவந்த பெண்ணிற்கு 3.8 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 63 வயதான கிம் ரிச்சர்ட்சன் என்ற பெண் கடைகளிலிருந்து பொருட்களை திருடி, அவற்றை ‘இபே’ ஆன்லைன் தளத்தில் விற்று வந்துள்ளார். அதில் கிடைத்துவந்த பணத்தில் அமெரிக்கா முழுவதும் சுற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் ‘பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்பதுபோல் 19 ஆண்டுகளாக இதே தொழிலாக வைத்திருந்த கிம் ரிச்சர்ட்சன் தற்போது கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
 
 
காவல்துறையினரால் பொறி வைத்து பிடிக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.  அங்கு கிம் ரிச்சர்ட்சன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு நூதன தண்டனையாக  54 மாதங்களுங்கு சிறைச்சாலையில் தங்கியிருந்து சேவையாற்றி வர உத்தரவிட்டார். மேலும் இதுவரை திருடப்பட்ட பொருட்களுக்கு இழப்பீடாக 3.8 மில்லியன் டாலர் செலுத்தவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com