முன்னாள் அதிபர் ட்ரம்ப், பென்சில்வேனியா பகுதியில் உள்ள பட்லர் என்னும் இடத்தில் பரப்புரை செய்தபோது, காதில் சுடப்பட்டார். இதுகுறித்த விசாரணையில் இறங்கிய எப்.பி.ஐ., துப்பாக்கியால் சுட்ட க்ரூக்ஸ், அதிபர் ஜோ பைடன் மற்றும் ட்ரம்பின் பரப்புரை பயணங்கள் குறித்தும், துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் குறித்தும் இணையத்தில் அதிகமுறை தேடியது தெரியவந்துள்ளது.
முன்னாள் அதிபர் ட்ரம்ப்-ஐ கொல்வதற்கு 60 முறை முயற்சி செய்ததும், ஏர்.ஆர். ரைபிள் ரக துப்பாக்கியை பயன்படுத்தி அவரைச் சுட்டதும் விசாரணையில் உறுதியாகிஉள்ளது.
பென்சில்வேனியாவில் பேசிய ட்ரம்ப், மேடையில் எங்கிருந்து பேசுவார் என்பது உள்ளிட்ட ஆய்வில், தாமஸ் க்ரூக்ஸ் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸிடம், ஜோ-பைடன் மற்றும் ட்ரம்ப்-ஐ கொல்வதற்கான நோக்கம் மட்டுமேமேலோங்கி இருந்ததாகவும், எதற்காக கொலை செய்ய வேண்டும் என்பதற்கான உள்நோக்கம் தெரியவில்லை என்றும் எப்.பி.ஐ.தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:”என்னை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யுபிஎஸ்சிக்கு கிடையாது” - பூஜா கேட்கர்