அபுதாபி| 4 வயது மகளுக்கு விநோத நோய்.. தன் கல்லீரலைக் கொடுத்து காப்பாற்றிய ’பாசக்கார’ இந்திய தந்தை!

அபுதாயில் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற தந்தை ஒருவர் அவருடைய கல்லீரலின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பது நெகிழச் செய்துள்ளது.
ரசியா
ரசியாஎக்ஸ் தளம்
Published on

இன்றைய உலகில் ஓர் உயிரின் மதிப்பு தெரிந்து அவற்றைக் காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும் உறவினர்களும் போராடுகின்றனர். அந்த வகையில், தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோரே உடலுறுப்பு தானங்களைச் செய்வதும், அதுபோல் பெற்றோருக்கு குழந்தைகளே உடலுறுப்புத் தானங்களை வழங்குவதும் நடந்தேறி வருகிறது. உதாரணத்துக்கு பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வுக்கு அவரது மகள் கிட்னியைத் தந்தது பேசுபொருளானது. அதுபோல அபுதாயில் தன் மகளின் உயிரைக் காப்பாற்ற தந்தை ஒருவர் அவருடைய கல்லீரலின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பது நெகிழச் செய்துள்ளது.

அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வருபவர் இம்ரான் கான். இந்தியரான இவருடைய மகள் பெயர் ரசியா. தற்போது இந்த சிறுமிக்கு 4 வயதாகும் நிலையில், குழந்தைப் பருவத்தில் தோன்றும் 'பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3' என்ற கல்லீரலை தாக்கும் அரியநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அறுவைசிகிச்சைக்கு 1 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 27 லட்சம்) செலவாகும் என கூறப்பட்டது.

இதையும் படிக்க: கீர்த்தி சக்ரா| வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இப்படி இழிவாக பேசலாமா! அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை

ரசியா
உ.பி| கர்ப்ப காலத்தில் உருவான முடியை உண்ணும் விநோத பழக்கம்! பெண்ணின் வயிற்றில் இருந்த 2.5 கிலோ முடி!

முன்னதாக, இவருடைய சகோதரியும் இம்ரான் கானின் மூத்த மகளுமான ஷைமாவுக்கும் இதேபோன்று நோய் தாக்கியது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2019-ஆம் ஆண்டில் 4 வயதாக இருந்தபோது உயிரிழந்தார். ஏற்கெனவே இந்த நோயினால், மூத்த மகளை இழந்ததால், 2வது மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என நினைத்தார். இதற்காக அமீரக அரசின் தொண்டு அமைப்பான எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட்டைத் தொடர்புகொண்டு உதவி கேட்டார்.

மேலும் அந்த தனியார் மருத்துவமனையும் தங்களது பங்களிப்புக்காக உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது. இதையடுத்து, அடுத்ததாக கல்லீரல் தானம் பெறுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. இதில் கொடையாளராக அந்த சிறுமி ரசியாவின் தந்தையான இம்ரான் கான், மகளின் உயிரைக் காக்க தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார்.

இதையும் படிக்க: புனே|IAS பெண் அதிகாரி மீது விழும் குற்றச்சாட்டுகள்..பணியிட மாற்றத்திற்குப் பிறகு வெளிவரும் தகவல்கள்!

ரசியா
”தந்தைக்கு என் கிட்னியை கொடுத்ததில் பெருமைகொள்கிறேன் “ - லாலு பிரசாத்தின் மகள் நெகிழ்ச்சி

இதையடுத்து, 12 மணி நேர அறுவைச்சிகிச்சையில் இம்ரான் கானின் கல்லீரலில் இருந்து சிறு பகுதி அகற்றப்பட்டு சிறுமி ரசியாவுக்கு பொருத்தப்பட்டது. அதன்பின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார்.

இதுகுறித்து டாக்டர் ரெஹான் சைஃப், “ரசியாவை தாக்கிய நோய் ஒரு மரபணு மாற்றத்தால் ஏற்படுவதாகும். இந்த நோய் உலகில் 1 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தால் ஏற்படுகிறது. இது பித்த சுரப்பு மூலம் அசாதாரணத்திற்கு வழிவகுக்கிறது. இறுதியில் கல்லீரலை சேதப்படுத்துகிறது. இது, குழந்தை பருவத்தில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகளாக வெளிப்படுகிறது.

இதனால், காது கேளாமை, வயிற்றுப்போக்கு மற்றும் கணையத்தில் வீக்கம் காணப்படும். இதில் வெற்றிபெற்றது நாட்டின் சுகாதாரத் துறைக்கு ஒரு மைல்கல். இது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மருத்துவச் சமூகத்திற்கு ஒரு மகத்தான சாதனை. ரசியா இனி பள்ளிக்குச் சுதந்திரமாகப் போக முடியும். எல்லாக் குழந்தைகளைப்போலவே அவராலும் நன்றாக இயங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

WAM

மகளின் அறுவைச்சிகிச்சைக்கு பிறகு பேசிய தந்தை இம்ரான் கான், ”எனது மகளின் கண் நோயால் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போதுதான் தெளிவாக உள்ளதை காண்கிறேன். இனி, ஆபத்தில்லை” என கண்ணீர்மலகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா| குழந்தைகளைப் படிக்கவைக்க கிட்னியை விற்ற தந்தை.. மோசடிக் கும்பலிடம் ஏமாந்த கொடூரம்!

ரசியா
கென்யா: திடீரென செயலிழந்த கால்கள்.. மர்ம நோய் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான 100 பள்ளிச் சிறுமிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com