அறுவை சிகிச்சையின்போது டிக்டாக்: சர்ச்சை மருத்துவருக்கு தடை

அறுவை சிகிச்சையின்போது டிக்டாக்: சர்ச்சை மருத்துவருக்கு தடை
அறுவை சிகிச்சையின்போது டிக்டாக்:  சர்ச்சை மருத்துவருக்கு தடை
Published on
அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கையில் வீடியோவுக்காக நடனமாடுவது, ஜோக் சொல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் டாக்டர் டேனியல் அரோனோவ்.
பிரபல 'டிக் டாக்' செயலிக்கு, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு நாடுகளில் 'டிக் டாக்' இன்னமும் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக பயன்பாட்டில் உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலும் 'டிக் டாக்' செயலி லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டேனியல் அரோனோவ் என்பவர் 'டிக் டாக்' பிபரலமாக அறியப்படுகிறார். 'டிக் டாக்கில் இவருக்கு 13 மில்லியனுக்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் பற்றி அதிகம் அறியப்படாத விஷயங்களை டேனியல் அரோனோவ் தனது டிக்டாக்கில் பகிர்ந்து வந்துள்ளார்.
ஆனால் இவர் 'டிக்டாக்'குக்கு அடிமையாகி இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின்போது அதில் முழுக்கவனம் செலுத்தாமல் 'டிக்டாக்'குக்கு வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கையில் வீடியோவுக்காக நடனமாடுவது, ஜோக் சொல்வது உள்ளிட்ட செயல்களிலும் டேனியல் அரோனோவ் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் நோயாளிகளின் அனுமதியின்றி அறுவை சிகிச்சை வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தொடர்ச்சியான புகார்கள் காரணமாக, அறுவை சிகிச்சைகளை கையாள டேனியல் அரோனோவுக்கு ஆஸ்திரேலிய அரசின் சுகாதார பயிற்சியாளர் ஒழுங்குமுறை நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும் அறுவை சிகிச்சை தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com