ஜப்பான் நாட்டை சேர்ந்த மீம்ஸ் புகழ் கபோசு நாய், உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளது இணையவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுபோக்கிற்காக சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் தங்களின் நேரத்தை சமூக வலைதளத்திலேயே செலவிடுகின்றனர்.அந்த வகையில் பெரும் பார்க்கப்படுவது மீம்ஸ்தான். மீம்கள்தான் சிறிய விஷயங்களைகூட எளிதில் மக்களிடத்தில் கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றன.
அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை எல்லோரையில் கிண்டல் செய்யவும், விமர்சிக்கவும் பயன்படுத்தப்படும் இந்த மீம்களில், ’டாகி மீம என்ற பெயரில் டிரெண்டானதுதான்.. கபோசு..இந்த கபோசுவின் புகைப்படத்தைகொண்டுதான் இந்த ’டாகி மீமே’ பிரபலமானது.
”ஷிபா இனு” என்ற இன வகையைச் சேர்ந்ததுதான் ஜப்பானை சேர்ந்த கபோசுவை. இதனை 2008 ஆம் ஆண்டு தத்தெடுத்ததாக நாயின் உரிமையாளர் கூறுகிறார். இதன்பிறகு, 2010 ஆம் ஆண்டு கபோசுவை போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த போட்டோ ஷூட்தான் இப்பொழுது மீம் புகழ் மண்ணனாக கபோசு விளங்குவதற்கு காரணமாக அமைந்தது. இதனைதொடர்ந்து, கிரிப்டோ நிறுவனத்தின் லோகோவாக மாறியது கபோசு. 2013 ல் தொடங்கப்பட்ட கிரிப்டோ கரன்சியான ’Dogecoin’ இல் கபோசுவின் போட்டோ வைக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஆண்டு, எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதற்கு பின்னர், சிறிதுகாலம் டிவிட்டரின் லோகோவாகவும் கபோசு வைக்கப்பட்டது.
இப்படி உலக அளவில் பிரபலமடைந்த கபோசு, கடந்த 2022ல் பித்தப்பை மற்றும் கல்லீரலில் வீக்கத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில்தான், 17 வயதான கபோசு நேற்று (மே 24 )காலை 7:50 மணி அளவில் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்தவகையில், இதன் இறுதி சடங்கு மே 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது முகபானையின் மூலம் மீம்ஸ் நாயகனாக புகழ்ப்பெற்ற கபோசு, என்றும் நம் நினைவுகளில் வாழ்வார் என்றும் தங்களின் இரங்கல் செய்தியை பதிவிட்டுவரும் நெட்சன்களுக்கு இதன் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.