ஃபேஸ்புக்கில் முகக் கவசங்களை விளம்பரப்படுத்தத் தடை

ஃபேஸ்புக்கில் முகக் கவசங்களை விளம்பரப்படுத்தத் தடை
ஃபேஸ்புக்கில் முகக் கவசங்களை விளம்பரப்படுத்தத் தடை
Published on

மருத்துவ முகக் கவசங்களை விளம்பரம் செய்வதற்கு ஃபேஸ்புக் தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அணியவேண்டும் என அரசும், மருத்துவர்களும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.



இதற்கிடையே பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், மருத்துவ முகக் கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி வணிகர்கள் சிலர், லாப நோக்கத்தில் முகக் கவசம் விற்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கொரோனா அச்சுறுத்தலை உற்று கவனித்து வருவதாகவும், உலகம் முழுவதும் நிலவி வரும் அச்சத்தை பயன்படுத்தி சிலர் விளம்பரம் தொடர்பான விதிகளை மீறி வருவதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் மருத்துவ முகக் கவசங்களை விளம்பரப்படுத்துவதற்கு தற்காலிக தடையை விதிப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com