’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: ஃபேஸ்புக் நேர்காணலில் நெகிழ்ந்த மலாலா

’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: ஃபேஸ்புக் நேர்காணலில் நெகிழ்ந்த மலாலா
’மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருந்தது’: ஃபேஸ்புக் நேர்காணலில் நெகிழ்ந்த மலாலா
Published on

தாலிபான்களால் சுடப்பட்ட போது மரணம் கூட, தமக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்ததாக நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய் தெரிவித்தார். 

மலாலாவை ஃபேஸ்புக் தலைமை இயக்குனர் ஷெரில் சேண்ட்பேர்க் நேர்காணல் செய்தார். இதுதொடர்பான வீடியோ பதிவினைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷெரில், மலாலாவை நேர்காணல் செய்தது கவுரவம் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட மலாலா யூசுப்சாய், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வு குறித்து பேசிய மலாலா, எனது குரலை ஒடுக்க அவர்கள் நினைத்தனர். ஆனால், நான் உயிர்பிழைத்து விட்டேன். அந்த தருணத்திலேயே மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருப்பதை நான் உணர்ந்தேன் என்று நெகிழ்ந்திருக்கிறார். சுதந்திரமாக இருப்பதால், தாம் விரும்பும் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க முடிந்துள்ளதாகவும் மலாலா குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002ல் பள்ளிப் பேருந்தில் ஏறும் போது தாலிபான் தீவிரவாதிகளால் மூன்று முறை சுடப்பட்ட 10 வயது பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். பெண் கல்விக்காக குரல் கொடுத்ததாலேயே அவர் சுடப்பட்டது தெரிந்து உலக அளவில் உதவிக் கரம் அவருக்கு நீண்டது. தி நியூயார்க் டைம்ஸ் இதழ் அந்த சிறுமி குறித்து எடுத்த ஆவணப்படம் மலாலா யூசுப்சாயை உலக அரங்குக்கு கொண்டு சென்றது. பெண் கல்விக்கான அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும்பொருட்டு நோபல் பரிசு உள்ளிட்ட உலகின் பல்வேறு அங்கீகாரங்கள் மலாலாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன.    
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com