நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் முன்னாள் டாக்டருக்கு 60 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக இருப்பவர் லேர்ரி நாசர் (54). டாக்டரான இவர், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியில் பணிபுரிந்தார். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சுமார் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு சிறுமிகளை நிர்வாணப் படம் எடுத்து இணையதளங்களில் பதிவேற்றியதாகவும் புகார்கள் கூறப்பட்டது. இதில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் சிலரும் அடங்குவர்.
இதையடுத்து இவர் மீது தொடரப்பட்ட வழக்கு மிக்சிகன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜானெட் நெஃப், டாக்டர் நாசருக்கு மூன்று வழங்குகளில் தலா 20 வருடம் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.