தாய்லாந்து: அடுத்த பிரதமர் வேட்பாளர் தேர்வு... யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

தாய்லாந்தின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பேடோங்டர்ன் ஷினவத்ரா
பேடோங்டர்ன் ஷினவத்ராஎக்ஸ் தளம்
Published on

தாய்லாந்து நாட்டு அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு, நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி 6 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார். அவரை அமைச்சராக்கியது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை, பிச்சித் சைபான் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பிச்சித் சைபானை அமைச்சராக நியமிக்க பரிந்துரை செய்த தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

ஸ்ரெத்தா தவிசின்
ஸ்ரெத்தா தவிசின்எக்ஸ் தளம்

இதுதொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “அமைச்சராக நியமிக்கப்பட்ட பிச்சித், ஒழுங்கீனம் காரணமாக சிறைத் தண்டனை பெற்றவர் என்பதை அறிந்தும், அவரை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் நியமித்துள்ளார். இதன்மூலம் அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறை விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்’’ எனத் தெரிவித்தது. தற்போது ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அமைச்சரவை காபந்து அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: நீரஜ் சோப்ராவுடன் திருமணம் என பரவிய வதந்தி... மவுனம் கலைத்த மனு பாக்கர்!

பேடோங்டர்ன் ஷினவத்ரா
தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி

இந்த நிலையில், புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வுசெய்யும் பணியில் ஆளும்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை அமைச்சர் சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில், பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வுசெய்து இன்று அறிவித்துள்ளது.

பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது, பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பேடோங்டர்ன் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் அங்கீகரித்தபின் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்பார். அத்துடன் அவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுவார்.

தாய்லாந்து அரசில் பெரும்பான்மையை நிரூபிக்க 247 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பியூ தாய் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 314 இடங்களைக் கொண்டுள்ளன. இதனால், அவர் பிரதமராவதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: “வினேஷ் போகத் இந்த தேசத்தின் கோஹினூர்..” - CAS-ன் முடிவைச் சாடிய இந்திய ஒலிம்பிக் வீரர்கள்!

பேடோங்டர்ன் ஷினவத்ரா
’இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ - அதிரடியில் இறங்கிய தாய்லாந்து! ஏன் தெரியுமா?

யார் இந்த பேடோங்டர்ன் ஷினவத்ரா?

37 வயதான இவர், 2006ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மூன்றாவது மகள் ஆவார். பாங்காக்கில் வளர்ந்த இவர், நகரின் மையத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படித்தார். சிறுவயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், பின்னர் சர்ரே பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஹோட்டல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற ஐக்கிய இராஜ்ஜியம் சென்றார். பின்னர், தனது குடும்ப நிறுவனத்திற்காக வேலை செய்தார். 2019ஆம் ஆண்டு வணிகத்தில் பெயர்பெற்ற பிடோக் சூக்சாவாஸை ஷினவத்ரா திருமணம் செய்துகொண்டார்.

தந்தையுடன் பேடோங்டர்ன் ஷினவத்ரா
தந்தையுடன் பேடோங்டர்ன் ஷினவத்ராஎக்ஸ் தளம்

இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கட்சியான பியூ தாய், அவரைப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்ததன்மூலம், ஷினவத்ரா குடும்ப உறுப்பினர்களில் நான்காவது பிரதமராகப் பதவியேற்க உள்ளார் பேடோங்டர்ன் ஷினவத்ரா.

ஷினவத்ரா குடும்பமும், பிரதமர் பதிவிகளும்...

தக்சினின் மைத்துனர் சோம்சாய் வோங்சாவத் 2008ஆம் ஆண்டு சிறிதுகாலம் பிரதமராக இருந்தார்.

அடுத்து அவரது சகோதரி யிங்லக் ஷினவத்ரா 2011 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார்.

இருவரும் நீதிமன்றத் தீர்ப்புகளால் பதவியில் இருந்து தள்ளப்பட்டனர்.

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் தந்தை தக்சின் ஷினவத்ராவும் பிரதமராக இருந்துள்ளார்.

ஆகவே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதே இவரது பெயரும் பிரதமர் பட்டியலில் இருந்தது. ஆனால், இளம்வயது காரணமாக இவர் அப்போது நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: “6 மணிக்கு மேல் வேலை பார்க்க மாட்டேன்” - என்ற ஸ்டார்பக்ஸ் CEO பணி நீக்கம்... காரணம் என்ன?

பேடோங்டர்ன் ஷினவத்ரா
மன்னராட்சியை விமர்சித்த இளைஞர்: 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த தாய்லாந்து நீதிமன்றம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com