"நான் உயிரோடு இருக்கிறேன்; எல்லாம் சரியாகவிடும்" - உக்ரைன் பெண் ராணுவ வீரர் உருக்கம்

"நான் உயிரோடு இருக்கிறேன்; எல்லாம் சரியாகவிடும்" - உக்ரைன் பெண் ராணுவ வீரர் உருக்கம்
"நான் உயிரோடு இருக்கிறேன்; எல்லாம் சரியாகவிடும்" - உக்ரைன் பெண் ராணுவ வீரர் உருக்கம்
Published on

உக்ரைன் பெண் ராணுவ வீரர் ஒருவர், 'நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். எல்லாம் சரியாகிவிடும்'' என்று பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்தினர் உக்கிரமாக களமாடி வருகின்றனர். இந்நிலையில், பெண் ராணுவ வீரர் ஒருவர் பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் அவர், ''நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். சூரியன் ஒளிர்கிறது. பறவைகள் பாடுகின்றன. எல்லாம் சரியாகிவிடும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ராணுவ வீரர் யார்? அவர் பெயர் என்ன என்பது குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து பாராட்டியுள்ளனர். மனதை உருக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளதாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com