தரை தட்டி நிற்கும் கப்பல்... சூயஸ் கால்வாயில் முடங்கி போன கப்பல் போக்குவரத்து!

தரை தட்டி நிற்கும் கப்பல்... சூயஸ் கால்வாயில் முடங்கி போன கப்பல் போக்குவரத்து!
தரை தட்டி நிற்கும் கப்பல்... சூயஸ் கால்வாயில் முடங்கி போன கப்பல் போக்குவரத்து!
Published on

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஆன கப்பல் போக்குவரத்துக்காக செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் வழித்தடம் தான் சூயஸ் கால்வாய். உலகின் மிக முக்கிய கடல் போக்குவாரத்து வழித்தடமாக இது விளங்குகிறது. இந்நிலையில் இந்த கால்வாயில் உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எவர்கிரீன் கப்பல் கடுமையான காற்றின் காரணமாக கால்வாயில் குறுக்கே மாட்டிக் கொண்டுள்ளது. 

163 கிலோ மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கால்வாயில் தான் தற்போது 1312 அடி நீளம் கொண்ட கப்பல் குறுக்கு பக்கமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் மற்ற கப்பல்கள் கடக்க முடியாத நிலை உள்ளது. இதனை கடலில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து ஸ்தம்பிப்பு எனவும் சொல்லலாம். 

மாட்டிக்கொண்டு உள்ள கப்பலை மீட்கும் நடவடிக்கையை கால்வாய் நிர்வாகமும், எவர்கிரீன் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் இதுவரை எடுத்த முயற்சிகள் கைகொடுக்கவில்லை. இதனால் கோடி கணக்கான ரூபாய் வர்த்தகம் உலகளவில் முடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எவர்கிரீன் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்துக்கு பயணித்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com