அணுக்கரு பிணைப்பில் அதிக ஆற்றல்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை

அணுக்கரு பிணைப்பில் அதிக ஆற்றல்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை
அணுக்கரு பிணைப்பில் அதிக ஆற்றல்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் சாதனை
Published on

அணுக்கரு பிணைப்பு தொழில்நுட்பம் மூலம் அதிக ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தியை கண்டறிவதில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுக்களை அதிக வெப்பநிலையில் இணைப்பது மூலம் அணுக்கருக்கள் இணைந்து ஆற்றல் வெளிப்படுவது வழக்கம். தற்போது வரை அணுக்கரு இணைப்பு மூலம் 22 மெகாஜூல் ஆற்றலே வெளிக்கொணரப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய முயற்சிகள் பலனாக 59 மெகாஜூல் ஆற்றல் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு அருகே நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. அறிவியலின் முன் நின்ற மிகப்பெரிய சவாலுக்கு தற்போது தீர்வை நெருங்கியுள்ளதாக இங்கிலாந்து அணுசக்தி ஆணையத்தின் தலைவர் இயான் சாப்மேன் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் தற்போது பெட்ரோலியமே பிரதான எரிபொருளாக திகழும் நிலையில் அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத, நடைமுறையில் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய எரிபொருளை கண்டறியும் முயற்சி உலகெங்கும் நடந்துவரும் நிலையில் அணுக்கரு இணைவு மூலம் அதிக ஆற்றலை வெளிக்கொணர்ந்துள்ளது மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பான அணுமின்னுற்பத்தி முறையாகவும் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com