இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கல், மண், சிமெண்ட் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில், இதனை உண்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளது கேட்பதற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் 39 வயதான பெண், பேட்ரிஸ் பெஞ்சமின் ராம்கூலம். இவர் தனது பள்ளிப்பருவ நண்பர் ஒருவரை காதலித்து மணம் முடித்துள்ளார். பேட்ரிஸை பொறுத்தவரை கல்,மண், சிமெண்ட் உண்ணும் அரிதான பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தனது 18 வயதிலிருந்தே இத்தகைய பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். இது தனது உடலுக்கு விளைவிக்கும் என்று அறிந்தும் கூட அந்த பழக்கத்திலிருந்து அவரால் விலக இயலவில்லை, அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்ன வென்றால், சிமெண்ட், கல், மண் சாப்பிடுவது அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவரே செய்தி ஒன்றுக்கு தெரிவித்துள்ளர்.
அறிக்கை ஒன்றின்படி, பேட்ரிஸ் அவரது வீட்டின் சுவரை உடைத்து அதிலிருந்து கற்களையும், மண்ணையும் உண்பது வழக்கம் என்று தெரிவிக்கிறது. ஆனால், ஆரம்பகாலத்தில் இது எதுவும் அறியாத பேட்ரிஸின் கணவர், வெகு நாட்களுக்கு பிறகுதான் இதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பின்னர்,பேட்ரிஸை இப்பழக்கத்தை கைவிடுமாறு பல முறை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் , இதற்கு பதிலளித்த பேட்ரிஸ், இதை சாப்பிடுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் மருத்துவ மனைக்கு இவரை அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்ததில், இவர் பிகா எனப்படும் ஒருவைகையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு இல்லாத பொருட்களை சாப்பிட விரும்புவார்கள். மேலும், சாப்பிட கூடாத உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விரும்பி உண்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இப்பழக்கத்தை கைவிடும் படியும், கைவிடுவதற்கான மருந்துகளை பரிந்துரை செய்துள்ளனர் மருத்துவர்கள். இருப்பினும், சிமெண்ட், கல், மண்ணை உண்பதில் அடிமையான பேட்ரிஸால் இதுலிருந்து விடுபட முடியவில்லை என்பதுதான் உண்மை.
18 வயதில் இவர் தொடர்ந்த இப்பழக்கம், இவரை மீளா அடிமை தனத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாது உடலுக்கு மிகவும் தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.