கடந்த 10 வருடங்களாகவே பர்மிங்காம் நகரின் நிர்வாகம் அதன் செலவினங்களின் அடிப்படையில் தள்ளாட்டத்தைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, 2010-ல் சுமார் 5 ஆயிரம் பெண் ஊழியர்கள் சம ஊதியம் கேட்டு வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில் வென்றதும், அவர்களுக்கான நிதியை தீர்ப்பதும் பர்மிங்காம் நகர கவுன்சிலின் சிக்கலை அதிகரிக்கச் செய்தது. இவற்றுடன் கடந்தாண்டு காமன்வெல்த் போட்டிகளை தாராள செலவில் நடத்தியதும் அதன் பட்ஜெட்டில் வீழ்ச்சியைச் சந்தித்தது. எனவே அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளை பர்மிங்காம் நகர கவுன்சில் ரத்து செய்தது.
பிரிவு 114 என்பதன்கீழ் பர்மிங்காம் நகர கவுன்சில் கடந்த 5ஆம் தேதி மேற்கொண்ட அறிவிப்பின் அடிப்படையில் புதிய செலவினங்களுக்கு கைவிரித்துள்ளது. 114 பிரிவின்கீழ் அடிப்படையில் திவாலானாலும், அதன் சட்டப்பூர்வமான கடமைகள் தொடர இருக்கின்றன. கல்வி, குழந்தைகள் மற்றும் முதியோர் சமூக பாதுகாப்பு, குப்பைகள் சேகரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் மட்டுமே அங்கே தொடரும். அதுவும் எத்தனை மாதங்களுக்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பர்மிங்காம் நகரத்தின் காரணமாக அந்நாட்டு மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.