”ஆபீஸுக்கு லேட்டாதான் வருவேன்” - முதலாளிக்கு ஷாக் கொடுத்த ஊழியர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் பதிவு!

பணி நேரம் முடிந்து கூடுதல் நேரம் பணியாற்றியதற்காக, மறுநாள் பணிக்கு தாமதமாகவே வருவேன் என நபர் ஒருவர் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
model image
model imagefreepik
Published on

உலகம் முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறமிருக்க, மறுபுறம் நிரந்தர வேலையினால் மிகுந்த மனஅழுத்தத்தை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. அதாவது, பெரும்பாலான ஊழியர்கள், தமது பணி நேரம் முடிந்த பிறகும் நிறுவனத்திடமோ அல்லது மேலதிகாரிகளிடமோ அலுவலகரீதியாக தொடர்பில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதாவது அவர்கள் சொல்லும் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

model image
model imagefreepik

இதனால், பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பணி நேரம் முடிந்து கூடுதல் நேரம் பணியாற்றியதற்காக, மறுநாள் பணிக்கு தாமதமாகவே வருவேன் என நபர் ஒருவர் தெரிவித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: "வீடு இடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது"- புல்டோசர் நடவடிக்கை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

model image
வேலை நேரம் தாண்டியும் தொடர்புகொள்ளும் முதலாளிகள்.. 88% சதவிகித பேர் பாதிப்பு.. ஆய்வில் தகவல்!

இதுதொடர்பாக அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர், தனது முதலாளிக்கு அனுப்பிய குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில்தான் இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய குறுந்தகவலில், "வணக்கம், இன்று நான் அலுவலகத்தைவிட்டு 8.30 மணிக்குப் புறப்படுவதால் நாளை காலை 11.30 மணிக்கு அலுவலகம் வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறுந்தகவலை ஸ்கிரீன்ஷாட் எடுத்த முதலாளி அதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, "என் ஜூனியர் இதை அனுப்பியதை என்னால் நம்ப முடியவில்லை. இந்தக் காலத்து இளைஞர்கள் வேற மாதிரி உள்ளனர். அவர் கூடுதல் நேரம் பணியாற்றிவிட்டு, அதனை ஈடு செய்யும்விதமாக அலுவலகத்திற்குத் தாமதமாக வரப்போகிறார். என்னவொரு நடவடிக்கை, என்னிடம் இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை" எனப் பதிவிட்டுள்ளார்.

இது, இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ள நிலையில், பயனர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பலர் ”குறுந்தகவல் அனுப்பிய ஊழியர் செய்ததுதான் சரி” என தெரிவித்திருப்பதுடன், அவர் பக்கம் இருக்கும் நியாயத்தையும் எடுத்துரைத்துள்ளனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் | ‘சொந்தக்காலில் நில்லுங்கள்..’ அஜித் பவாருக்கு செக்வைத்த உச்ச நீதிமன்றம்!

model image
5 நாட்கள் வேலை | அதிகாரி போட்ட அதிரடி உத்தரவு.. வெளியேறும் 73% அமேசான் ஊழியர்கள்?.. ஆய்வில் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com