ட்ரம்ப் வெற்றி | ஸ்டாா்லிங்க் நிறுவனம் இந்தியாவில் விரைவில் வர்த்தகம்.. எலான் மஸ்க் காட்டில் மழை!

டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், எலான் மஸ்க், இந்தியாவில் தொடங்க இருக்கும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வில்லாமல் வேகம் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது.
india, elon musk
india, elon muskx page
Published on

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தனது வர்த்தகத்தைப் பலமுறை கொண்டுவர முயற்சி செய்துவருகிறார். ஆனால், அவருக்குப் பலவிதத்திலும் தோல்வியே கிடைத்துவருகிறது.

இந்த நிலையில், அவருடைய நெருங்கிய நண்பரான டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், எலான் மஸ்க், இந்தியாவில் தொடங்க இருக்கும் வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் தொய்வில்லாமல் வேகம் பிடிக்கும் எனக் கருதப்படுகிறது. காரணம், இந்திய பிரதமர் மோடியின் நெருங்கிய நணபராக ட்ரம்ப் உள்ளார்.

அந்த வகையில், எலான் மஸ்க்கிற்காக ட்ரம்ப் எதையும் செய்வார். அவர் இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் வலியுறுத்தம் பட்சத்தில், எலான் மஸ்க்கின் வர்த்தகம் இந்தியாவில் சூடுபிடிக்கும் என்று கூறப்படுகிறது.

எலான் மஸ்க்கின் ஸ்டாா்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைத்தொடா்பு சேவைகள் வழங்க ஆா்வம்காட்டி வருகிறது. இதனால் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதுதொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிராய்) ஜியோ நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.

இதையும் படிக்க: அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்

india, elon musk
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு|எலான் மஸ்க்கிற்கு மத்தியஅரசு கிரீன்சிக்னல்.. அம்பானிக்கு சிக்கல்!

இதைத் தொடர்ந்து, ’இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு, ஏலம் முறையில் நடைபெறாது’ என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதாவது மத்திய அரசு, செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். இது, எலான் மஸ்க்கின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு, ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு கூறப்பட்டது. இதனால், எலான் மஸ்க் சந்தோஷத்தில் இருப்பதுடன், அதை தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் வரவேற்றிருந்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த அறிவிப்பினால், இந்தியாவில் உடனடியாக ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகப்படுத்த முடியும். இவ்விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள TRAI-இன் பரிந்துரைகளை பொறுத்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதில் இறுதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது. அலைக்கற்றையானது குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நிர்வாக அடிப்படையில் விற்பனை செய்யப்படும் எனவும், டிராய் இதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, எலான் மஸ்க்கின் மின்சார கார் நிறுவனங்களும் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?

india, elon musk
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு | எலான் மஸ்க் - முகேஷ் அம்பானி மோதல்.. மத்திய அரசு அதிரடி முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com