அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது யாருக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ எலான் மஸ்க்கிற்கு நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். காரணம் அவரது டெஸ்லா மோட்டார்ஸ், ஹைப்பர்லூப், ஜிப்2, சோலார் சிட்டி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), பேபால் (PayPal) போன்ற பல நிறுவனமானது மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை வெளிப்படையாக ஆதரித்தார் எலான் மஸ்க் .
அதே சமயம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்கை, “எலான் மஸ்க் ஒரு மேதை.. ஒரு கண்டுபிடிப்பாளர், ஆக்கப்பூர்வமான நவீனமான மற்றும் திறமையான அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் உண்மையில் வரலாற்றை படைத்துள்ளார் ” என்று பல்வேறு விதமாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
இருவருக்குள்ளே உள்ள இந்த நெருக்கத்தினால், மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க நிர்வாகத்தில் எலான் மஸ்க் செல்வாக்குமிக்கவராக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரிவிகித மாற்றம் எலான் மஸ்கிற்கு சாதகமாக இருக்குமா?
முன்னதாக ட்ரம்ப் ”நாங்க ஆட்சிக்கு வந்தால் எங்கள் அரசாங்கம் மிகவும் திறமையாக செயல்படுவதுடன் அமெரிக்காவின் வரி செலுத்துவோர் டாலர்களை திறம்பட பயன்படுத்துவதையும் உறுதி செய்யும்” என்று கூறியிருந்தார்.
இந்த வாக்குறுதியின் படி வரி குறைப்புகள் செய்யப்பட்டால், மஸ்கின் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கலாம் என்றும், தவிர, அமெரிக்காவின் பெரு நிறுவனங்களும் இதனால் பயனடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது முந்தைய பதவி காலத்தில் (2017)ல் கார்ப்பரேட் வரி விகிதத்தை 35% லிருந்து 21% ஆக குறைத்தார். அதே போன்று உயர் வருமான வரி விகிதத்தை 39% லிருந்து 37% குறைத்தது குறிப்பிடத்தக்கது.
விண்வெளித்துறையில் ஸ்பேஸ் எக்ஸ்
விண்வெளித்துறையில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் சமீபத்தில் பல சிக்கல்களை சந்தித்தது வருவதால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்ஸை நாசா தேர்வுசெய்யும். மேலும் பாதுகாப்புத் துறை, மற்றும், நாசாவுடனான விண்வெளி ஒப்பந்தங்கள் உட்பட அரசாங்க ஒப்பந்தங்களில் முக்கிய இடங்களில் எலான் மஸ்கின் நிறுவனங்கள் முக்கிய இடத்தை வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.