சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்தார் எலான் மஸ்க்.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலிக் கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டார் எலான் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்தார். எலான் மஸ்க்கின் இந்த முடிவை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 20% அளவுக்கு சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் இருந்து போலிக்கணக்குகளை நீக்குவதே தமக்கு முன்னுரிமை என எலான் மஸ்க் முன்பு பேசியிருந்தார். இந்நிலையில் 5% போலிக் கணக்குகள் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.