ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஆகியவற்றிலிருந்து ட்விட்டர் போன்ற மைக்ரோ பிளாக்கிங் தளம் அகற்றப்பட்டால், "மாற்று தொலைபேசியை" உருவாக்குவேன் என ட்விட்டர் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் வாங்கியதிலிருந்து அதிரடியாக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்தது உட்பட அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளும், கருத்துகளும் தொடர்ச்சியாக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ட்விட்டர் பயனாளரான லிஸ் வீலர் என்ற பெண் பதிவு செய்த ட்வீட்டுக்கு எலோன் மஸ்க் பதிலளித்து இருப்பது பேசு பொருளாகி வருகிறது.
லிஸ் வீலர், "ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது, ஆப் ஸ்டோர்களிலிருந்து ட்விட்டரை நீக்க துவக்கினால், பிறகு எலான் மஸ்க் தனியாக சொந்த ஸ்மார்ட் போனைத் தயாரிக்க வேண்டும். பாதி நாடு மகிழ்ச்சியுடன் ஒரு சார்புடைய, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டை விட்டு வெளியேறும். மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டுகளை உருவாக்கு போது, சிறிய ஸ்மார்ட்போன் உருவாகுவது எளிதாக தானே? “ என்றுள்ளார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “ஆப்பிள் மற்றும் கூகுள் தங்கள் மரியாதைக்குரிய தளங்களிலிருந்து ட்விட்டரை அகற்றுவதை நான் விரும்பவில்லை. இருப்பினும், அப்படி ஒரு நிலை வந்தால், வேறு வழியில்லை என்றால், ஒரு "மாற்று தொலைபேசியை" உருவாக்குவேன்” என்றுள்ளார்.
இதனை தொடர்ந்து எலோன் மஸ்க், அர்த்தமில்லாமல் ஆப்பிள் மற்றும் கூகிள்ளை பகைத்துக்கொள்கிறார் என விமர்சித்து வருகின்றனர்.