எகிப்து நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு புதைகுழியில் 13 மரத்தாலான சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சகம், அவை 2500 ஆண்டுகள் பழைமையானவை எனத் தெரிவித்துள்ளது.
தொல்பொருள் ஆய்வு தொடர்பாக புதைகுழிகளைத் தோண்டும்போது கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அதே இடத்தில் 13 சவப்பெட்டிகளும் கிடைத்துள்ளன. கல்லறைகளில் காணப்பட்ட கெய்ரோவின் தெற்கில் உள்ள சக்காரா பகுதி புராதன மெம்பிஸ் நகரின் தலைநகரம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்த பாதுகாக்கப்பட்ட மர சவப்பெட்டிகள் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதில் காணப்படும் ஓவியங்களில் பழுப்பு மற்றும் நீலநிறக் கோடுகள் உள்ளன.