எங்கே செல்லும் இந்த சினிமா? : அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்

எங்கே செல்லும் இந்த சினிமா? : அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்
எங்கே செல்லும் இந்த சினிமா? : அமெரிக்காவில் மூடப்படும் 543 தியேட்டர்கள்
Published on

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமான ரீகல் சினிமா, நாடு முழுவதும் உள்ள 543 தியேட்டர்களை மூடும் நிலைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றால் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஈடுசெய்யமுடியாத பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரீகல் நிறுவனத்தின் பிரிட்டிஷ் தாய் நிறுவனமான சினி வேர்ல்டு, "ஐம்பது ரீகல் தியேட்டர்கள் மட்டும் வார விடுமுறை நாட்களில் செயல்படத் தொடங்கும்" என்று அறிவித்துள்ளது.

சினிமா தியேட்டர்களை மூடும் முடிவு என்பது தற்காலிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள சினிமா தியேட்டர்களை தற்காலிகமாக மூடுவது பற்றி ஆலோசித்துவருகிறோம். ஆனால் இறுதி முடிவு எடுக்கவில்லை. நாங்கள் முடிவு எடுத்ததும் அனைத்து ஊழியர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அறிவிப்போம் " என்று சினிவேர்ல்டு டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் 42 மாகாணங்களில் 543 தியேட்டர்களில் 7,155 ஸ்கிரீன்கள் உள்ளன. ரீகல் சினிமாதான் அமெரிக்காவின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் நிறுவனமாக உள்ளது. மார்ச் மாத மத்தியில் இருந்து அந்த தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

ஹாலிவுட்டில் தயாரான மிகப்பெரிய படங்களும் ரிலிஸ் செய்யப்படாமல் தியேட்டர் திறப்புக்காக காத்திருக்கின்றன. ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை படத்தின் வெளியீடு ஏப்ரல் 2021க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தியேட்டர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதால், உலகப் பட இயக்குநர்கள் கவலையடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com