“ஓசோன் படலப் பாதிப்பு சீராகி வருகிறது” - ஐ.நா அறிவிப்பு

“ஓசோன் படலப் பாதிப்பு சீராகி வருகிறது” - ஐ.நா அறிவிப்பு
 “ஓசோன் படலப் பாதிப்பு சீராகி வருகிறது” - ஐ.நா அறிவிப்பு
Published on

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு ‌தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம். ஓசோனை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16 ஆம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐநா அறிவித்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டறிந்தார்.

1970-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கணடறியப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டது. 

பின்னர், இதுபோன்ற கருவிகளை மாற்றி வடிவமைத்து தற்போது பயன்படுத்தி வருகிறோம். அண்டார்டிகா கண்டத்தின் மேலே அமெரிக்க கண்டத்தின் அளவிற்கு ஓசோன் படலத்தில் ஓட்டை இருக்கிறது. புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதற்கும் இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது

இந்நிலையில் புவியின் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு ‌தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அண்டார்டிகா வான் பகுதியில் ஏற்பட்ட துளை படிப்படியாக சுருங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு வேகமாக சீராகி வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com