அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கி சீர்குலைத்த நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளது.
மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்தது. இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. கொலராடோவில் புழுதிப் புயல் மற்றும் மின்துண்டிப்பால் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இருளில் மூழ்கின. புழுதிப் புயல் மட்டுமின்றி இடி, மின்னலுடன் மழை மற்றும் பனிப்பொழிவும் ஏற்படக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.