ஏழைகளுக்கு இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் அரசுக்கு குவியும் பாராட்டுகள்

ஏழைகளுக்கு இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் அரசுக்கு குவியும் பாராட்டுகள்
ஏழைகளுக்கு இலவச ரொட்டி வழங்கும் இயந்திரம்; துபாய் அரசுக்கு குவியும் பாராட்டுகள்
Published on

துபாய் முழுவதும் ரொட்டியை இலவசமாக வழங்கும் ‘ வெண்டிங்க்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரில் எந்த ஒரு ஏழையும் பசியில் தூங்கக் கூடாது என்பதின் முதல் முயற்சியாக, ஒரு நிமிடத்திற்குள் சூடான ரொட்டியைத் தயாரித்து வழங்கும் இயந்திரம் துபாய் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. அனைவருக்கும் ரொட்டி' திட்டம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அறிவுரையால் உருவானது. 

இதன் முதற்கட்டமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த தொண்டுக்கு, பொதுமக்களும் நிதி உதவி செய்யலாம் என்று துபாய் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் நேரடியாக இந்த உணவு இயந்திரம் மூலமாகவோ, இணையதளம் வழியாகவும் , துபாய் நவ் ஆப் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ நன்கொடை அளிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச உணவு இயந்திரத்தில் உணவைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற தொழிலாளர் ஒருவர், " இன்றைய இரவு உணவுக்காக ஒதுக்கி வைத்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்ப உதவும்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியதை MBRGCEC ன் இயக்குநர், ஜைனப் ஜுமா அல் தமிமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் , ’ எங்களது இந்த புதுமையான சமூக தொண்டு முயற்சியானது பல்வேறு மக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும். இந்த நல்ல முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து அனைத்து இடங்களிலும் இந்த முயற்சியை விரிவுபடுத்தப்படும் என நம்புகிறோம்” என்றுள்ளார்.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்த மனிதாபிமானம் மிகுந்த முதற்கட்ட தொண்டு முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com