போதை பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு வாழ்நாள் சிறை

போதை பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு வாழ்நாள் சிறை
போதை பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு வாழ்நாள் சிறை
Published on

போதை பொருள் கடத்திய வழக்கில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசிய வாழ் தமிழருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான 30 வயதுடைய சரவணன் என்பவர் மலேசியாவில் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஜோகர் மாகாணத்தில் அயா என அறியப்படும் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனிடம் வாகன ஓட்டுராகவும், மெய்க்காப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் போதை பொருள் கடத்தியதாக சிங்கப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 
இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது சரவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரவணன் தனது முதலாளி அயா கொடுத்தது புகையிலை பொட்டலம் என்று நினைத்து எடுத்து சென்றுள்ளார். காவல் துறையினரிடம் பிடிபட்ட பிறகே அதில் போதை பொருள் இருந்தது தெரியவந்தது என விளக்கினார். 

இதற்கான ஆதாரங்களை ஆராய்ந்த நீதிமன்றம் சரவணனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது. வழக்கமாக சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனையே வழங்கப்படும். சரவணன் தரப்பு வாதத்தை ஏற்றதை அடுத்து அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com