‘I AM BACK’ | நொடிக்கு நொடி திக்.. திக்! அமெரிக்காவில் மீண்டும் அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்கிற பட்சத்தில், அதை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்எக்ஸ் தளம்
Published on

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்கிற பட்சத்தில், அதை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47 ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இதில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் , குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பும் களம் கண்டனர்.

அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போதிருந்தே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

இந்தநிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று, குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ளார் என்று அந்நாட்டு ஊடகமான ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தற்போது செய்தியை வெளியிட்டுள்ளது. இதனால், ட்ரம்பின் ஆதரவாளர்கள் தங்களது கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்
ட்ரம்ப் ஜெயித்தால் இந்தியாவுக்கு நல்லதா? மூத்த பத்திரிகையாளர் மணி கூறுவது என்ன?

இதன்படி, அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக.. குடியரசுக்கட்சியை சேர்ந்த ட்ரம்ப் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி தன் ஆதரவாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என முழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com