“கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்” - ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் - டொனால்டு ட்ரம்ப்
கமலா ஹாரிஸ் - டொனால்டு ட்ரம்ப்முகநூல்
Published on

“அதிபர் ஜோ பைடனைப் போல் கமலா ஹாரிசும் மனநலம் குன்றியவர்” என விமர்சித்துள்ள ட்ரம்ப், இதுவரை சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எதுவும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் நமது நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களால்தான் இதை நம் நாட்டிற்கு செய்ய முடியும்” எனக் கூறினார்.

ட்ரம்ப், கமலா ஹாரிஸ்
ட்ரம்ப், கமலா ஹாரிஸ்pt web

அத்துடன், “சட்டவிரோத குடியேற்ற பிரச்னைக்கு கமலா ஹாரிசால் எதையும் செய்ய முடியாது. அவர் நமது நாட்டிற்கு வந்துள்ள பேரழிவு” என்று சாடி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், இருகட்சிகளின் அதிபர் வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்ப் இடையிலான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

கமலா ஹாரிஸ் - டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க தேர்தல்|கூகுள் மீது குற்றச்சாட்டு.. அதிபரான பின்பு வழக்கு.. அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்!

சில நாட்களுக்கு முன்பு எல்லைப் பகுதிக்கு சென்று பார்வையிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்த நிலையில், தற்போது அவரை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com