அமெரிக்க அதிபர் ட்ரம்பை பதவி நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதம் செனட் சபையில் காரசாரமாக தொடங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யும்படி உக்ரைன் அதிபரை ட்ரம்ப் மிரட்டிய தொலைபேசி உரையாடல் வெளியாகி அவரது அரசியல் வாழ்க்கையை அசைத்து பார்த்தது. இதனால் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.
இதில் எதிர்த்தரப்பான ஜனநாயக கட்சி வலுவாக இருந்ததால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான காரசார விவாதங்கள் தொடங்கியுள்ளது. புதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தாமல் இந்த விவகாரத்தை குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் மூடி மறைக்க பார்ப்பதாக ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.