"சீனாவில் இருந்து வெளியேறுங்கள்" - அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு

"சீனாவில் இருந்து வெளியேறுங்கள்" - அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு
"சீனாவில் இருந்து வெளியேறுங்கள்" - அமெரிக்க நிறுவனங்களுக்கு ட்ரம்ப் உத்தரவு
Published on

அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், சீனாவை விட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் தனது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை, வெளிப்படையாக கூறினால், சீனப் பொருட்கள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், சீனாவை முட்டாள்தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்தித்திருப்பதாக பதிவிட்டுள்ளார். 

அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவுசார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதைத் தொடர சீனர்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்றும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்கா திரும்பி வந்தும் பொருட்களைத் தயாரிக்க பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயாபீன், நிலக்கடலை க்ரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக சீனா நேற்று அதிரடி காட்டியது. இந்த தகவல் வெளியானதும், ஆவேசமடைந்த ட்ரம்ப், சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளார். எனினும், தனியார் நிறுவனங்களை வெளியேற அதிபர் எந்த அதிகாரத்தின் கீழ் உத்தரவிட முடியும் என்பது தெளிவாகவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com