பதவியேற்கும் ட்ரம்ப்.. காத்திருக்கும் 10 லட்சம் இந்தியர்களுக்குப் பாதிப்பு.. கிரீன் கார்டுக்கு செக்?

கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கிரீன் கார்டு, இந்தியர்கள்
கிரீன் கார்டு, இந்தியர்கள்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் நடைபெற்ற 47வது அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமோக வெற்றிபெற்றுள்ளார். விரைவில் பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் பட்சத்தில், அமெரிக்காவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் அவசியமான ஓர் அடையாள அட்டையே கிரீன் கார்டு ஆகும்.

அமெரிக்காவில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பும் லட்சக்கணக்கான இந்தியர்களின் கனவாகவும் இந்த கிரீன் கார்டு விளங்கிவருகிறது. இதனால் இந்த கார்டுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் கிரீன் கார்டுகளின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. ஆய்வு ஒன்றின்படி, கடந்த ஆண்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க:"நாட்டை ஒன்றிணைக்க.." - ட்ரம்புக்கு அழைப்பு.. கமலா ஹாரிஸுக்கு ஆறுதல்.. அதிபர் ஜோ பைடன் சொல்வது என்ன?

கிரீன் கார்டு, இந்தியர்கள்
”யாரும் விரக்தியடைய வேண்டாம்” - தோல்வி குறித்து கமலா ஹாரிஸ்! அதிருப்தியில் ஹாலிவுட் பிரபலங்கள்!

இந்த நிலையில்தான், சமீபத்தில் நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரசாரத்தில், குடியேற்றம் ஒரு முக்கியப் பிரச்னையாக வெடித்தது. அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள்மீது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என டொனால்டு ட்ரம்ப் பேசியிருந்தார். அந்தக் கொள்கையை முன்னெடுப்பாகவும் வைத்திருந்தார். ஆம், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது’ என்ற ரீதியில் அவர் தனது பிரசாரத்தை வகுத்திருந்தார். அதனால்தான் இந்த தேர்தலிலும் அவர் வெற்றியும் பெற்றார்.

அதாவது, குழந்தைகள் தானியங்கி குடியுரிமையைப் பெற குறைந்தபட்சம் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது ட்ரம்பின் நிலைப்பாடு ஆகும். குடியேற்ற விதிகளின்படி, வேறு நாட்டிலிருந்து பெற்றோர் தனது குழந்தையுடன் அமெரிக்காவிற்குள் நுழைந்தால், அவர்களுடைய குழந்தைக்கு 21 வயதாகும்போது பெற்றோரிடம் கிரீன் கார்டு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்தக் குழந்தை தனது பெற்றோரின் விசாவைச் சார்ந்து வாழ முடியாது. அவருக்கென தனி விசா தேவை.

trump
trumpx page

இதுகுறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகும். இதனால்தான் இதுபற்றிய செய்தி அமெரிக்காவில் வேகம் பிடித்துள்ளது.

இதையும் படிக்க: விரைவில் பதவியேற்பு.. தயாராகும் வெள்ளைமாளிகை.. லிங்கனின் ஆவி நடமாடுவதாக மீண்டும் கட்டுக்கதை வைரல்!

கிரீன் கார்டு, இந்தியர்கள்
'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகளை தளர்த்துகிறதா அமெரிக்கா?

அந்த வகையில், ட்ரம்ப் பொறுப்பேற்றபின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ட்ரம்ப், அதிபராகப் பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவைஏற்படுத்தும். அத்துடன், 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு பாதகமாக அமையும்.

ட்ரம்ப் அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமையை நன்கு கூர்ந்து கவனித்தால், அவரது அந்த உத்தரவு சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளுக்கு மட்டுமானதாக முடிந்துவிடாது. அது மேலும் பலரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க குடியேற்ற விதிகளின்படி, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் 1,40,000 கிரீன் கார்டுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் 7 சதவீத ஒதுக்கீடு என்ற வரம்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலை, இந்திய மற்றும் சீன தொழில் வல்லுநர்களுக்குப் பாதகமாக உள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளில் இருந்து வரும் வல்லுநர்களைவிட இவர்களின் எண்ணிக்கை அதிகம். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலும், செனட் சபையிலும் 'அமெரிக்காவின் குழந்தைகள் சட்டம் 2023 மசோதா' அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், நீண்டகால விசாக்கள் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு கிரீன் கார்டுக்கான உரிமை வழங்கப்படும். ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சல்மான் கானைத் தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்.. மும்பை போலீஸ் விசாரணை!

கிரீன் கார்டு, இந்தியர்கள்
கிரீன் கார்டு மசோதா நிறைவேற்றம்: அமெரிக்க இந்தியர்கள் மகிழ்ச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com