அதிபர் ட்ரம்ப் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை

அதிபர் ட்ரம்ப் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை
அதிபர் ட்ரம்ப் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் அதிபராக இருப்பவர் ட்ரம்ப். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் நவம்பர் 3ஆம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் இடையே பிரச்சாரக் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்நிலையில், ட்ரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. டைபிரிங் ஜெட்டி என்பவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நார்வேயின் நாடாளுமன்றத்திற்கு 4 முறை தேர்வு செய்யப்பட்டவர் டைபிரிங். இவர் ட்ரம்ப் பெயரை பரிந்துரை செய்ததற்கான விளக்கத்தில், ‘இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே அமைதி நிலவுவதில் ட்ரம்ப் முக்கிய பங்காற்றுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com