சூடுபறக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் | ஜோ பைடனுக்கு சவால் விட்ட டொனால்டு ட்ரம்ப்!

அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என நம்புவதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், ஜோ பைடன்
ட்ரம்ப், ஜோ பைடன்எக்ஸ் தளம்
Published on

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார்.

இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்

இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர்.

ட்ரம்ப், ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல்| வேட்பாளர் மாற்றமா? ஜோ பைடன் சொன்ன திட்டவட்டமான பதில்!

ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்துவருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜோ பைடன்
ஜோ பைடன்Twitter

மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 ஜனநாயக எம்பிக்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: IPL Coach| வெளியேறும் கவுதம் கம்பீர்.. உள்நுழையும் ராகுல் டிராவிட்.. தீவிரம் காட்டும் கொல்கத்தா அணி!

இந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் நீடிப்பார் என நம்புவதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஜோ பைடன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் நீடிப்பார் என்று நம்புகிறேன். அவரிடம் இருக்கும் கர்வம் காரணமாக அவர் வெளியேற விரும்பமாட்டார். அவருடன் நடந்தது ஒரு விசித்திரமான விவாதம். ஏனெனில், அவர் அளித்த பதில்கள் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை. அவை பதில்கள்கூட இல்லை. அவரது பதில்கள் அர்த்தமோ, உணர்வோ இல்லாத வார்த்தைகளாக மட்டுமே இருந்தன" என தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்
டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்

இது ஒருபுறமிருக்க மறுபுறம் கோல்ஃப் விளையாட்டில்கூட, அதிபர் ஜோ பைடனை டொனால்டு ட்ரம்ப் வீழ்த்துவார் எனக் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், ”ஜோ பைடன் என்னை வீழ்த்த ஒரு வாய்ப்பு வழங்குகிறேன். என்னுடன் கோல்ஃப் போட்டியில் விளையாட அதிகாரப்பூர்வமாக ஜோ பைடனுக்குச் சவால் விடுகிறேன். என்னை அவர் வீழ்த்தினால், அவர் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்குகிறேன். ஏனெனில், அவர் என்னிடம் வெற்றிபெற மாட்டார். அதனால் நான் பந்தயம் கட்டுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விராட் கோலிக்குச் சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு... பெங்களூரு போலீஸ் அதிரடி நடவடிக்கை

ட்ரம்ப், ஜோ பைடன்
அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com