மத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன

மத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன
மத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன
Published on

இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இஸ்லாமியர்களில் இருந்து ஒரு பிரபாகரன் உருவாகி விடக் கூடும் என்றும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஈஸ்டர் நாளில் தேவாலயத்திலும் நட்சத்திர விடுதிகளிலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் பலியாயினர். உள்ளூர் இஸ்லாமியக் குழு இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் தொடர் கதையாகின. இந்நிலையில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன மத ஒற்றுமை குறித்து பேசியுள்ளார்.

முல்லைத்தீவில் பேசிய சிறிசேன, ''இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமியர்களில் இருந்து ஒரு பிரபாகரன் உருவாகி விடக் கூடும்'' என்று தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு கெஜட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை தற்போது மத ரீதியாக பிளவு பட்டுக் கிடப்பதாகவும் அதிபர் கவலை தெரிவித்ததாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மக்கள் மத்தியில் மத ரீதியிலான பிளவு தொடர்ந்தால் மற்றுமொரு உள்நாட்டுப் போர் உருவாகக் கூடும் என்றும் இதில் தோற்கப் போவது ஒட்டுமொத்த தேசமும்தான் என்றும் சிறிசேனா கவலை தெரிவித்தார் என்றும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com