ராணுவத்திலும், காவல்துறையிலும் தனது மோப்ப சக்தியால் துப்பறியப் பயன்படுத்தப்பட்ட நாய்கள் தற்போது நோய்களைக் கண்டறிய மருத்துவத் துறையிலும் கால் பதிக்கிறது.
தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் மான்செஸ்டர் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் வழங்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம் என மதிப்பிடப்படுகிறது. எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பார்கின்ஸன்ஸ் நோயால் பாட்ஜிக்கபட்டவர்களுக்கு கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டு, அது மத்திய நரம்பு மண்டலத்தை அதாவது மூளை முதுகுத்தண்டு பகுதிகளை பாதிக்கிறது. உலகில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பார்கின்ஸன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மட்டும் 500 பேரில் ஒருவர் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்படுவதாக மருத்துவ அறிகைகள் தெரிவிக்கின்றன. கைகளில் நடுக்கமும், தள்ளாட்டமான நடையும் தான் இந்த நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள்.