நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மெக்ஸிகோவில் இடிபாடுகளில் இருந்து உயிருடன் நாய் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய மற்றும் மெக்ஸிகோ மீட்புப் படையினர் இணைந்து உருக்குலைந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 6 நாட்களுக்குப் பின் அந்த நாயை உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது அந்த நாய் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இதனிடையே மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது. மொரெலாஸ் மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதால் ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது.