விண்வெளியில் சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... உடல்நல பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகரிப்பு?

விண்வெளியில் சிக்கித்தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு உடல் ரீதியாக பல பிரச்னைகள் வர வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்கோப்புப்படம்
Published on

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் கடந்த மாதம் (ஜூலை) 13ஆம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அப்போது பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்pt web

தொடர்ந்து, அவர்கள் பயணித்த ஸ்டார்லைன் போயிங் விண்கலத்தில் ஜூலை 26ம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால் அவற்றை சரிசெய்ய முடியவில்லை. இதனால் தற்போதும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சரியாக 7 நாட்களுக்கு விண்வெளி மையத்தில் தங்கி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திட்டம், 50 நாட்களைக் கடந்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்
அறிவோம் அறிவியல் 10| மேற்கில் சூரியன்.. ஒரு நாளிற்கு 17 மணி நேரம்! வியப்பூட்டும் யுரேனஸ் கிரகம்!

இருவரையும் மீண்டும் பூமிக்கு அழைத்துவர நாசா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்தாலும் இருவரும் உடல் ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்pt web

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், இயல்பாகவே உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இப்படி இருக்க, அதிக நாட்களுக்கு விண்வெளியில் இருப்பது உடலில் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. புவியீர்ப்பு விசை இல்லாததன் காரணமாக உடலின் தசை நார்கள் மற்றும் எலும்புகள் விரைவில் வலுவிழக்கின்றன.

விண்வெளியில் இருப்பவர்கள் எடையை உணராததால், உடலை சுமந்து இயக்கும் எலும்புகளின் செயல்பாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படும். விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் முறையான பயிற்சிகளுக்குப் பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதற்கேற்றபடி உடற்பயிற்சிகள் செய்தாலும், எலும்பில் ஏற்படும் இந்த பிரச்னை, எலும்பு முறிவுக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்pt web

அதேபோல், உடலில் நீரழப்பு ஏற்பட்டு பூமிக்கு திரும்புகையில் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், புவியீர்ப்பு விசை இல்லாததால் சிறுநீரத்தில் கால்சியம் அளவு அதிகரித்து, சிறுநீரக கற்கள் உண்டாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள். உடல் ரீதியாக ஏற்படும் இந்த மாற்றங்களை புரிந்துகொள்வது, சந்திக்கும் சவால்களை கையாள உதவும் என்றும் கூறப்படுகிறது.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்
சுனிதா வில்லியம்ஸ் சென்ற ‘போயிங் ஸ்டார் லைனர்’ விண்கலத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா?

முன்னதாக, “இந்த விண்கலம் எங்களை பூமிக்கு கொண்டு சேர்க்கும் என்பதை நான் நம்புகிறேன். எந்த பிரச்னையும் இல்லை என்ற நல்ல உணர்வு என் இதயத்தில் இருக்கிறது” என்று சுனிதா கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com