”I LOVE YOU GUYS” - முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எலான் மஸ்க்கிற்கு ஜாக்பாட்; எகிறும் சொத்துமதிப்பு!

தினமும் ஏதாவது ஒரு செய்தியில் வைரலாகி வரும் நபர்... உலகின் மிகப்பெரிய பணக்காரர்... இவருக்கு சம்பளம், பங்குகள் உள்ளிட்ட வகைகளில் 46 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் கிடைத்திருக்கிறது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்:கௌசல்யா

தினமும் ஏதாவது ஒரு செய்தியில் வைரலாகி வரும் நபர்... உலகின் மிகப்பெரிய பணக்காரர்... இவருக்கு சம்பளம், பங்குகள் உள்ளிட்ட வகைகளில் 46 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் கிடைத்திருக்கிறது. யார் இவர்? இவருக்கு ஏன் இவ்வளவு ஊதியம்? பார்க்கலாம்.

HOT DAMN, I LOVE YOU... இதத்தான் டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் முதலீட்டாளர்களைப் பார்த்து சொல்லியிருக்கிறாரு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க். இதுக்கு காரணம் இல்லாமல் இல்ல. டெக்ஸாசில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

எலான் மஸ்க்கிற்கு ஊதியம், பங்குகள் என 56 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 46 ஆயிரம் கோடி வழங்குவது குறித்து சர்ச்சை நிலவும் நிலையில், இதனை வழங்க சில்லறை முதலீட்டாளர்கள் ஒப்புதல் வழங்கியிருக்கின்றனர்.

இதுதான் எலான் மஸ்க் குஷியானதற்கு காரணம். இதுமட்டுமல்லாமல் டெஸ்லாவின் தலைமை அலுவலகத்தை டெக்ஸாசுக்கு மாற்றவும் முதலீட்டாளர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.

மேடையில் ஏறி பங்குதாரர்களை பார்த்து I LOVE YOU GUYSன்னு சொன்ன எலான் மஸ்க், தங்கள் நிறுனத்திற்கு வலுவான முதலீட்டாளர்கள் இருப்பதாக தெரிவித்தார். சில பெரிய பங்குதாரர்கள் எலான் மஸ்க்கிற்கு இவ்வளவு பெரிய தொகையை ஊதியமாக வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பெரிய தொகையை ஊதியமாக வழங்குவதை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், எலான் மஸ்க் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

எலான் மஸ்க்
’உக்ரைனுடன் போரை நிறுத்துகிறேன்..பேச்சுவார்த்தைக்கும் ரெடி; ஆனால்..’ - புதின் போடும் மாஸ்டர் பிளான்!

டெஸ்லாவின் வெற்றிக்கு எலான் மஸ்க்கின் பங்களிப்புதான் காரணம் எனக்கூறி சில்லறை முதலீட்டாளர்கள் வலுவான ஆதரவு தெரிவித்தனர். வாக்களித்த சில்லறை முதலீட்டாளர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் தனக்கு ஆதரவாக இருந்ததாக மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதத்தோடு தெரிவித்தார். வாகனம் முதல் வானம் வரை தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள எலான் மஸ்க்தான் தற்போது உலகின் மிகப்பெரிய பணக்காரர்.

டெஸ்லா மட்டுமல்ல ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க், எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இவருடையதுதான். ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? 212 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 17 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com