சீனாவுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுடனான பொருளாதார உறவுகளை துண்டித்துக் கொள்ளப் போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் கடும் ஆவேசத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வடகொரியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுடனான பொருளாதார உறவை துண்டித்துக் கொள்ளப் போவதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவால் சீனாவுக்குதான் பெரும் அளவு சுமை ஏற்படும் என கூறப்படுகிறது. ஏனெனில் வடகொரியாவின் 90 சதவீத ஏற்றுமதிகளை, சீனா தான் இறக்குமதி செய்து வருகிறது. தவிர அணு ஆயுத சோதனைகளை நிறுத்தும்படி வடகொரியாவுக்கு அறிவுரை வழங்குமாறு சீனாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.