வால்ட் டிஸ்னி நிறுவனம் ‘டிஸ்னி பிளஸ்’ என்ற வீடியோ ஸ்டீரிம் சேவை தளத்தை சில நாடுகளில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஸ்டீரிமிங் நிறுவனங்களுக்கு போட்டியாக டிஸ்னி நிறுவனம் தற்போது இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் ‘டிஸ்னி பிளஸ்’ என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது. இதனை முதல்கட்டமாக அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நேற்று தொடங்கியுள்ளது.
இந்த தளத்தில் ஸ்டார் வார்ஸ், அயர்ன் மேன், ஹல்க் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் குழந்தைகள் பார்த்து ரசிக்கும் அனிமேஷன் திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவையும் இத்தளத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தச் சேவை இந்தியாவில் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்த அப் வெளியிட்ட உடனேயே அதிகளவில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அதிக நபர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.