விசித்திர நோயால் தாக்கப்பட்ட பெண் மாடலிங்கில் சாதனை

விசித்திர நோயால் தாக்கப்பட்ட பெண் மாடலிங்கில் சாதனை
விசித்திர நோயால் தாக்கப்பட்ட பெண் மாடலிங்கில் சாதனை
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த மெலானி கெய்டஸ் என்ற பெண் தன் உடலில் உள்ள குறைகளை எல்லாம் தகர்த்து இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மெலானி கெய்டஸ்(28) பிறக்கும் போதே எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு பிறந்துள்ளார். அதன்பின் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் 40-முறை அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா நோய் தாக்கப்பட்டால் முடி வளராது, நகம் வளராது, பற்கள் உடைந்து போகும், தோல் துவாரங்கள் இருக்காது, இதனால் வியர்வை வெளியேறாது, அவர் தண்ணீரிலே இருக்க வேண்டும் என பிரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வதே மிக சிரமம். ஆனால் மெலானி நியூயார்க்கில் உள்ள கல்லூரி ஒன்றில் கலை தொடர்பான படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில், யூஜினியோ ரிகுன்கோ என்ற புகைப்படக் கலைஞர் மெலானி கெய்டஸை எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுவே மெலானி மாடலிங் துறைக்கு கால் பதிக்க வித்தாக அமைந்தது. அதன் பின் சர்வதேச பேஷன் இதழ்களின் அட்டைப்படங்களிலும் மெலானி வந்துள்ளார். இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வே போராட்டமாக இருக்கும் நிலையில், உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் மெலானி.

இது குறித்து மெலானி கூறுகையில், தனக்கு இந்த நோய் ஒரு பிரச்னையாக தெரியவில்லை. இந்த நோயோடு சேர்ந்து வாழ கற்றுக் கொண்டேன். ஆனால் என்னை சுற்றி உள்ளவர்கள் இதனை ஒரு நோயாகவே பார்த்தனர். என்னுடைய நண்பன் தான் என்னை மாடலிங் துறைக்கு செல்லுமாறு ஊக்கப்படுத்தினான்.  எனக்கு பல் இல்லை என்றாலும் என்னால் உணவு சாப்பிட முடியும். செயற்கை பல்லை பொருத்தி கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தினர் ஆனால் அது எனக்கு பிடிக்கவில்லை என கூறினார். 

இதே போன்று, வெண்புள்ளி தோல் நோயால் பாதிக்கப்பட்ட வின்னி ஹார்லோ என்ற பெண்மணியும் மாடலிங் துறையில் தனக்கான ஓர் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com