அந்தரத்தில் ஓட்டல், அதிகரிக்கும் ஆர்வம்!

அந்தரத்தில் ஓட்டல், அதிகரிக்கும் ஆர்வம்!
அந்தரத்தில் ஓட்டல், அதிகரிக்கும் ஆர்வம்!
Published on

பெல்ஜியத்தில், வாடிக்கையாளர்களுக்காக அந்தரத்தில் தொங்கியபடி உணவருந்தும்  உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. 

'டின்னர் இன் தி ஸ்கை' (DINNER IN THE SKY) என்ற அசாதாரணமான உணவகங்கள் உலகின் 60 நாடுகளில் உள்ளது. இந்நிலையில், பெல்ஜியத்தில், 50-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், தலைநகர் ப்ரசல்ஸில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த பூங்காவில், இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. கிரேன் உதவியுடன், தரையிலிருந்து கிட்டத்தட்ட 131 அடி உயரத்திற்கு கொண்டு செல்லப்படும் இந்த உணவகத் தளம், 20 பேர் வரை நாற்காலிகளில் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உணவுப் பரிமாறுபவர்களின் கனிவான உபசரிப்புடன் உணவு வகைகளை ருசித்து மகிழ, துணிச்சல்மிக்க பலரும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com