வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சி மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டிகுவா பார்போடஸுக்கு திரும்ப டொமினிக்கா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய மதிப்பில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக செலுத்திவிட்டு சிகிச்சை பெறச் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நரம்பு தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதி அளிக்கும்படி மெகுல் சோக்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து தப்பி சென்றதிலிருந்து ஆண்டிகுவாவில் தங்கியிருந்த மெகுல் சோக்சி டொமினிக்கா தீவுக்கு சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். அவரை ஒப்படைக்கவேண்டும் என இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர் மீண்டும் ஆண்டிகுவா செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பது அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.