அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் அதிக அளவில் இயற்கை வளங்களை சுரண்டியதால்தான் காலநிலை மாற்றம் என்னும் இயற்கை சீற்றத்தை நாம் சந்திக்கிறோம் என அதிக ஜனத்தொகையை கொண்ட, வளரும் நாடுகள் வலியுறுத்தியது. வளர்ந்த நாடுகளில் ஜனத்தொகை குறைவு என்றாலும், உணவு, பெட்ரோல், இயற்கை எரிவாயு, கனிம வளங்கள் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய கடும் பாதிப்புகள் உலகம் முழுவதிலும் பேரழிவை உண்டாக்கி வருகின்றன.