ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியூயார்க் வந்துள்ள நிலையில், அங்கு அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
'கறுப்பு இனத்தவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அதிபர் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'. 'ட்ரம்ப் ஒரு வெள்ளை இனவாதி'. 'இனப்படுகொலைகள் செய்து அடிமைகள் மூலம் அமெரிக்கா நிர்மாணிக்கப்பட்டது வெட்கக்கேடு' என்பன உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நியூயார்க் நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.